/* */

நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு

நாமக்கல் மாவட்ட அறங்காலவலர் குழு தலைவராக ராசிபுரம் ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு
X

நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக, ராசிபுரம் ரங்கசாமி பதவியேற்றார். அருகில் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார்.

இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின்படி, ஒவ்வொரு வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்ட கோயில்களுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பதற்கு அனைத்து வருவாய் மாவட்டத்திலும் மாவட்டக்குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அறங்காவலர் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்கள் அடங்கிய பட்டியல் தயாரித்து அரசுக்கு அளிக்கிறது. நிர்வாகத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ள திருக்கோயில்களில் மாவட்டக்குழுவின் மூலம் அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பதற்கு 5 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மாவட்டக் குழு அமைத்திட, நாமக்கல் அறநிலையத்துறை உதவி கமிஷனரால், அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனடிப்படையில் தமிழக அரசால், நாமக்கல் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி தமிழக அரசின் உத்தரவின்பில், ராசிபுரம் ரங்கசாமி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராகவும், பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலை சுந்தரராசு, நாமக்கல் கணேசபுரம் அருள்செல்வன், பல்லக்காபாளையம் சவுந்திரம், சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் சந்திராம்பாள் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையொட்டி, நாமக்கல் மாவட் அறங்காவலர்கள் நியமனக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதியேற்பு விழா, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது. நாமக்கல் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் உறுதி மொழி வாசித்து பதவியேற்றனர்.

மாநில திமுக நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், டாக்டர் மாயவன், நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் ஜெகநாதன், நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், ஒன்றிய திமு செயலாளர்கள் நாமக்கல் பழனிவேல், சேந்தமங்கலம் அசோக்குமார், எருமப்பட்டி பாலசுப்ரமணியம், மோகனூர் நவலடி உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உதவி கமிஷனர் இளையராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Updated On: 1 April 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  2. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  3. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  4. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  6. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  8. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  9. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  10. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...