/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது..!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,068 ஆக உயர்ந்தது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்  314 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது..!
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,068 ஆக உயர்ந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஒரு வாரமாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி 306 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டது. இன்று 16ம் தேதி ஒரு நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில்உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 41,068 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 608 பேர் சிகிச்சை குனமாகி வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 37,381 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 3,324 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 16 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...