/* */

நாமக்கல்: 2 நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: 2 நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல் கோட்டையில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் 352 ஆக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கடந்த 1வாரமாக பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது.

கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை 72 இடங்களில் 9,900 பேருக்கு தடுப்பூசி பேடப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 2,700 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 8 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் என மொத்தம் 10,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் 2 நாட்களில் மொத்தம் 20,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Updated On: 13 Jun 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...