அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள நாமக்கல் கலெக்டர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள நாமக்கல் கலெக்டர் வேண்டுகோள்
X

பைல் படம்.

கொரோனா நோய் இன்னும் முழுமையாக ஒழியவில்லை. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 13,84,300 டோஸ் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (66.49 சதவீதம்) 9,20,409 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி (23.14 சதவீதம்) 3,20,302 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 8,066 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 437 பேருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 9,818 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 538 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 8,323 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 764 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 1,23,340 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 49,059 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

அரசு அளிக்கும் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லாதது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அந்தந்த மையங்களிலேயே அரை மணி நேரம் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பிலிருந்தாலே போதுமானது. அதன் பின்னர் நாம் செய்யும் அனைத்து விதமான வழக்கமான பணிகளையும் எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளலாம். எந்தவித பத்தியமும் இன்றி எல்லாவகை உணவுகளையும் வழக்கம்போல எடுத்துக்கொள்ளலாம்.

இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குறிப்பிட்ட காலம் கடந்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.மேலும், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா நோய்த் தொற்றின் வீரியம் குறைவாகக் காணப்படும்.

கொரோனா நோய்த்தொற்றானது முற்றிலும் ஒழியவில்லை. தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். எனவே சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Updated On: 2021-10-14T08:46:31+05:30

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி 45 பேருக்கு கொரோனா
 2. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் 23ம் தேதி 54 பேருக்கு கொரோனா
 3. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் 23ம் தேதி 2 பேருக்கு கொரோனா
 4. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 5. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 6. இராமநாதபுரம்
  ராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 7. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 8. சிவகங்கை
  சிவகங்கை மாவட்டத்தில் 23ம் தேதி 11 பேருக்கு கொரோனா
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 23ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி