தீபாவளிக்கு ரூ.1 கோடி ஜவுளி விற்பனை செய்ய நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் இலக்கு

நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்காக ரூ.1 கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தீபாவளிக்கு ரூ.1 கோடி ஜவுளி விற்பனை செய்ய நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் இலக்கு
X

நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் ஷோரூமில், தீபாவளி தள்ளுபடி சிறப்பு விற்பனையை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் ஜவுளி ஷோரூமில், தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விற்பனையை துவக்கி வைத்துப் பேசியதாவது: கடந்த 87 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கும் வகையிலும், விழா காலங்களில் கோ ஆப்டெக்சில் 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேவைகள், சேலம் பட்டு சேலைகள் மற்றும் மென் பட்டு புடவைகள் ஏராளமாக வந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

30 சதவீதம், தீபாவளி சிறப்பு தள்ளுபடியுடன் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவன பணியாளர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி வழங்குகிறது. நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் ஷோருமில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடி மதிப்பில் ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 22 Sep 2022 11:00 AM GMT

Related News