/* */

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டது ஆன்மீக புத்தக விற்பனை நிலையம்

Namakkal Anjaneyar Temple -நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டது ஆன்மீக  புத்தக விற்பனை நிலையம்
X

நாமக்கல் ஆஞ்நேயர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையம்.

Namakkal Anjaneyar Temple - நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக, ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மீகபுத்தக விற்பனை நிலையம் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

நாமக்கல் கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு நின்ற கோலத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாமக்கல் வருபவர்கள் இந்த ஆஞ்சநேயரை தரிசித்து செல்ல தவறுவது இல்லை. இங்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில், ஆன்மீக புத்தக நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் துவக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆன்மீக புத்தக நிலையங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் முருகன் கோவில், மருதமலை முருகன் கோவில், பழனி முருகன் கோவில், பன்னாரி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்பட 48 கோவில்களில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் நகரில், ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், ஸ்ரீ நரசிம்மரை வணங்கி நிலையில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தியா முழுவதும் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு, சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில்களின் தல வரலாறுகளை அறியவும், ஆன்மீக தகவல்கலை தெரிந்துகொள்ளும் வகையிலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்பேரில், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்புத்தக விற்பனை நிலையத்தில், ஸ்ரீ நரசிம்மர் கோவில் வரலாறு, தாயார் போற்றி, உமையம்மை, காளியம்மன், தென்முகக் கடவுள், சிவபெருமான், கோதண்டராமர், மாரியம்மன், நடராஜர், முருகவேள், விநாயகர், திருமால், அனுமன், துர்க்கையம்மன், அறம் அரண் அறிவுடமை, முக்கிய திருக்கோவில்கள், நவக்கிரக கோயில்கள், கோவில்களின் தல வரலாறு உள்பட பல்வேறு ஆன்மீக நூல்கள் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக நிலையம் விரைவில் திறப்பு விழா செய்யப்பட்டு, பக்தர்களுக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Oct 2022 6:54 AM GMT

Related News