/* */

நாமக்கல்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் 901 மாணவர்கள் ஆப்சென்ட்

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் 901 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனார்கள்.

HIGHLIGHTS

நாமக்கல்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் 901 மாணவர்கள் ஆப்சென்ட்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. மொத்தம் 901 மாணவ மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

தமிழகம் முழுவதும், பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இம்மாதம் நடைபெறுகிறது. முதல்கட்டமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி துவங்கியது. இன்று 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில்,ல 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 300 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 10,954 மாணவர்கள், 9,708 மாணவியர்கள் என, மொத்தம் 20,662 பேர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.

தேர்வுக்காக, 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், மற்றும் மொத்தம் 19 வழித்தட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 90 முதன்மை கண்காணிப்பாளர்கள், 90 துறை அலுவலர்கள், 161 நிரந்தர படையினர், 1,310 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.

இன்று துவங்கிய 10ம் வகுப்பு தமிழ் தேர்வில், நாமக்கல் கல்வி மாவட்டத்தில், மொத்தம், 9,688 மாணவ, மாணவியரில், தனித்தேர்வர்கள் உள்பட 418 பேர் கலந்து கொள்ள வில்லை. அவர்களில், 3 பேர் மொழி பாடத்தில் விலக்கு அளிக்கப்பட்டவர்கள். திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், மொத்தம் 11,212 மாணவ, மாணவியரில் 483 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மாவட்டத்தை பொறுத்தவரை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 901 பேர் பங்கேற்கவில்லை.

Updated On: 6 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி