நாமக்கல்: டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

நாமக்கல்லில் முன் விரோதம் காரணமாக கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்: டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
X

பைல் படம்

முன் விரோதம் காரணமாக கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கார் டிரைவர் பிரபாகரன் 29. அவரது சகோதரி மகன், நாமக்கல் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் சரியாக படிக்காததால், பிரபாகரன் அவனை கண்டித்துள்ளார். அப்போது, அங்கிருந்த அவரது நண்பர் மைத்தான் (எ) சுரேந்தர் (27) தட்டிக் கேட்டுள்ளார். அதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9.30 மணிக்கு, செல்லப்பாகாலனியில் உள்ள மாதாகோவில் பின்புறம், பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சுரேந்தருக்கும், பிரபாகரனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

தகராறின் போது, மேதர்மாதேவியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர் சுரேந்தருக்கு ஆதரவாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், விக்னேஷை கத்தியால் குத்தினார். அதையடுத்து, பிரபாகரன் அருகில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கிக் கொண்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற சுரேந்தர் மற்றும் சிலர் பிரபாகரனை வெளியே இழுத்து வந்து, கத்தியால் சரமாரியாக குத்தினர். அதில், உடலில் 17 இடங்களில் கத்தி குத்து காயம் ஏற்பட்ட பிரபாகரன் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சுரேந்தர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, கொலை வழக்கில், சுரேந்தர், அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி (23), நவீன் (22) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரையில் மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
 2. பாளையங்கோட்டை
  விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...
 3. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 4. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 5. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 6. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 7. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 8. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 9. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 10. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்