/* */

மோகனூர் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் தேர்த்திருவிழா 27ம் தேதி துவக்கம்

Today Temple News in Tamil -மோகனூர் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருத்தேர் பெருவிழா வரும் 27ம் தேதி துவக்குகிறது.

HIGHLIGHTS

மோகனூர் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் தேர்த்திருவிழா 27ம் தேதி துவக்கம்
X

பைல் படம்.

Today Temple News in Tamil - நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிரசித்திபெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு திருத்தேர் பெருவிழா வரும் 27ம் தேதி துவக்ங்குகிறது. விழாவின் முதல் நாளான 27ம் தேதி காலை சர்வத்திர திருமஞ்சனமும், பகலில் முகூர்த்த தேங்காயுடன் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இரவு அங்குரார்ப்பணம் நடைபெறும். 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை திருக்கொடியேற்றம், பகலில் சூரிய பிரபை புறப்பாடு, ஸ்நபன திருமஞ்சனமும் மற்றும் இரவு அன்ன வாகனமும், மன்மத சேவையும் நடைபெறும். 29ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடு, மதியம் ஸ்நபன திருமஞ்சனமும், இரவு சிம்ம வாகனமும் நடைபெறும். 30ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடு ஸ்தாபன திருமஞ்சனம் மற்றும் இரவு ஹனுமந்த வாகன சேவை நடைபெறும்.

ஜூலை 1 ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடு ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் இரவு பெரிய திருவி கருடசேவை நடைபெறும். 2 ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடு மற்றும் இரவு சேஷ வாகன சேவை நடைபெறும். 3ம் தேதி காலை பல்லக்கு, இரவு யானை வாகன சேவை நடைபெறும். 4ம் தேதி திங்கள் கிழமை காலை பல்லக்கு புறப்பாடு, இரவு சுவாமி திருக்கல்யாண உற்சவம், இந்த்ர விமான சேவை நடைபெறும். 5 ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடு, இரவு குதிரை வாகன சேவை நடைபெறும்.

ஜூலை 6ம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ரதாரோஹணமும், காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். தேரோட்டத்தில் இந்துசமய அறநியைலத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். 7ம் தேதி காலை சக்ரஸ்நானம், இரவு துவஜ அவரோகஹனம் மற்றும் இரவு கற்பகவிருட்ச வாகன சேவை, 8ம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு மஞ்சள் நீர், வசந்த உற்சவம் நடைபெறும். 9ம் தேதி காலை திருமஞ்சமும், புஷ்பயாகம், இரவு பெரிய திருவடி கருடசேவை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி கமிஷனர் சிவகாமி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?