/* */

நாமக்கல் நகராட்சி கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

நாமக்கல் நகராட்சி கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
X
சாக்கடை கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் இருந்தன. பின்னர் தமிழகத்தின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக வசதி கருதி நகராட்சியை ஒட்டியுள்ள 9 பஞ்சாயத்துக்கள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதன் காரணமாக நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 39 வார்டுகள் உள்ளன. மொத்தம் 1.5 லட்சம் பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர். நகராட்சியின் சில பகுதிகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி இல்லாமல் திறந்த வெளியில் நகராட்சிப் பகுதி முழுவதும் கழிவு நீர் சாக்கடைகள் உள்ளன. இந்த கழிவு நீர் கால்வாய் வழியாக கொசவம்பட்டி ஏரிக்கு சென்று பின்னர் அங்கிருந்து கழிவுநீர் வீசாணம், பொட்டணம், வேட்டாம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

திறந்த வெளியில் செல்லும் நகராட்சி கழிவுநீர் கால்வாயில், குப்பைகள் தேங்கி, கழிவுநீர் செல்ல முடியாமல் அடிக்கடி தடை ஏற்பட்டுவிடும். அதனால், கழிவுநீர் குளம் போல் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. கிணறுகள் மற்றும் போர்வெல்களில் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களும், கால்நடைகளும் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டனர். விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் வேட்டாம்பாடி, சிதம்பரப்பட்டி, கொண்டம்பட்டி மேடு, வீசானம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பல முறை பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இருப்பினும் கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படவில்லை.தற்போது, கழிவு நீர் சாக்கடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி 2 கி.மீ தூரத்திற்கு கழிவுநீர் நீர் கால்வாய் தூர்வாரி சீரமைக்க எம்.எல்.ஏ. ராமலிங்கம் நடவடிக்கை எடுத்தார்.

எம்.எல்.ஏ. ராமலிங்கத்தின் வலியுறுத்தலின் பேரில், நாமக்கல் நகராட்சி மூலம் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணியை எம்.எல்.ஏ. ராமலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து, முழுமையாக தூர்வாரி, கழிவுநீர் தடையின்றி, கால்வாயில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களை அறிவுறுத்தினார். நாமக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுத்த எம்எல்ஏவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Updated On: 5 Oct 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  7. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  8. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்