/* */

மத்திய அரசின் உதவித்தொகை பெற சிறுபான்மை இன மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

மத்திய அரசின் உதவித்தொகை பெற சிறுபான்மை இன மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-2022 கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிக்டெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்குப் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறலாம். இதற்கான விண்ணப்பங்கள் மத்திய அரசின் scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. தகுதியான மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15.11.2021 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 30.11.2021 வரையிலும் இந்த வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை வெப்சைட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை வெப்சைட்டில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் வெப்சைட்டில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் minorityaffairs.gov.in/shcheme என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Oct 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...