நாமகிரிப்பேட்டையில் மாயமான நீட் தேர்வு மாணவி: தேனி மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம்

நாமகிரிப்பேட்டையில் காணாமல் போன நீட் தேர்வு எழுதிய மாணவி, தேனி மாவட்ட காவல் நிலையத்தில் இளைஞருடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமகிரிப்பேட்டையில் மாயமான நீட் தேர்வு மாணவி: தேனி மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவரது 19 வயது மகள், பிளஸ் 2 முடித்துள்ளார். அவர், நாமக்கல் தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்புக்குச் சென்று தேர்வுக்காக படித்து வந்தார்.

கடந்த 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதி உள்ளார். ஆனால், தேர்வை சரியாக எழுதவில்லை என அவர் வீட்டில் கூறியுள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர் மற்றும் மகளின் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து அவர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி, போலீசார் தனிப்படை அமைத்து, மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேசனில் இளைஞர் ஒருவருடன், நாமகிரிப்பேட்டை மாணவி தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களிடம் கூறுகையில், மாணவி காணாமல் போனதால், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி தேடும் பணியை மேற்கொண்டோம். இந்த நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Updated On: 2021-09-19T16:10:23+05:30

Related News

Latest News

 1. விக்கிரவாண்டி
  பனப்-பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
 2. திண்டிவனம்
  உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
 3. அரவக்குறிச்சி
  சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் காவலர்கள் பள்ளி மாணவர்களின் ஓவியப்...
 4. செஞ்சி
  குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்
 5. கரூர்
  கரூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
 7. தமிழ்நாடு
  அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு ...
 8. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 பேர்...
 9. மயிலம்
  சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
 10. ஜெயங்கொண்டம்
  ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்