/* */

நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

நாமக்கல் நகருகஅகு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் நகருக்கு விரைவில் புதிய பஸ் ஸ்டேண்ட் அமைக்க லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
X

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டத்தில் அதன் தலைவர் வாங்கிலி பேசினார்.

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 49வது ஆண்டு மகாசபைக்கூட்டம் அதன் தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளருமான வாங்கிலி தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

வளர்ந்து வரும் நாமக்கல்லில், நாள்தோறும் வாகன போக்குவரத்து அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நாமக்கல் நகருக்கு ரிங் ரோடு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அகில இந்திய அளவில் லாரிப்போக்குவரத்து தொழிலில்ல் முன்னிலை வகிக்கும் நாமக்கல்லில், வாகனங்களுக்கு தேவையான உதிரிபாங்கள் அனைத்தும் வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்த மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் நாமக்கல் பகுதியில் உருவானால், உதிரிபாகங்கள் எளிதில் கிடைப்பதுடன், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகிரிக்கும். எனவே நாமக்கல்லில் மோட்டார் வானக உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்பாராத வகையில் வாகனங்கள் விபத்தை சந்திக்க நேர்ந்தால், டிரைவரின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பர்மிட் ஆகியவற்றை ரத்து செய்யும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, டிரைவிங் லைசென்ஸ், பரமிட் ஆகியவற்றை ரத்து செய்யும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாமக்கல் பகுதியில் அரசு இன்ஜினியிங் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். லாரித்தொழிலின் வளர்ச்சிக்காக லாரித்தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும். நாமக்கல் பரமத்தி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ நகரில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, ஆட்டோநகர் செயல்படநடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகரில் அதிகமான லாரிகள் உள்ளன. இதனால் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க லாரி ஸ்டேண்டு அமைக்கவேண்டும். நாமக்கல் நகரில் அ டிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிய பஸ் ஸ்டேண்டு அமைக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. விரைவில் புதிய பஸ் ஸ்டேண்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க உபதலைவர் சுப்புரத்தினம், துணைத்தலைவர் பாலசந்திரன், இணை செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சீரங்கன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுப்பிரமணி, எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன், துணைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் அம்மையப்பன், ஆட்டோநகர் சங்க தலைவர் சுப்பிரமணி, செயலாளர் கார்த்திக், பொருளாளர் தீபக் உள்ளிட்ட திரளான லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Jun 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!