மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கபட்டு, 1964 ஆண்டு, மே 27ம் தேதி இறக்கும் வரை பிரதமராக பணியாற்றினார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மறைந்த முன்னாள்  பிரதமர் நேரு  நினைவு நாள் அனுசரிப்பு
X

மறைந்த பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த பாரதப் பிரதமர் நேருவின் 59வது நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த பாரத பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான நேருவின் 59வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் நேரு பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

நகர காங்கிரஸ் தலைவர் மோகன், பொறியாளர் அணி பொன்முடி, ஐஎன்டியுசி செல்வம், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் லோகநாதன், ஜபூருல்லா, நேதாஜி, மதிவாணன், அருணகிரி, சிவாஜி மன்றம் சந்திரசேகர், கார்த்தி, கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நேரு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.1889ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி, அலகாபாத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்தார். இந்திய விடுதலை போராட்டத்தின்போது முக்கிய பங்கு வகித்தார். 1919ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1923ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளர் ஆனார். இந்தியாவிற்கு அரசியலமைப்புக் கோரி கையெழுத்திடவர்களில் நேருவும் ஒருவர். இந்த அறிக்கை 1928ம் ஆண்டு அனைத்துக் கட்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டது.

இந்த அறிக்கைக்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவின் பெயர் வைக்கப்பட்டது. பின்னர், ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் கூடத்தின் தலைவர் ஆனார். மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1930 முதல் 1935ம் ஆண்டுகளில் அவர் பல முறை சிறை சென்றார். குழந்தைகள் மீதி அதிக அன்புக் கொண்டவராக இருந்தபடியால், அவருடைய பிறந்த நாளை “குழந்தைகள் தினமாக” கொண்டாடப்படுகிறது. 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்திய விடுதலை அடைந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கபட்டார். 1964 ஆண்டு, மே 27ம் தேதி காலமானார். அவருடைய இறப்பு வரை சுதந்திர இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார்.

Updated On: 27 May 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  2. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  4. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  5. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  6. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்
  7. சோழவந்தான்
    பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா
  8. இந்தியா
    சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு?
  9. கோவை மாநகர்
    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே பெண்கள் நடத்திய கோவில்...
  10. முசிறி
    தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் மோதல்: 12 பேர் கைது