நாமக்கல்: டாக்டர்கள் & லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்ட காசநோய் பிரிவில் டாக்டர்கள் மற்றும் லேப் டெக்னீசியின் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்: டாக்டர்கள் & லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட நலச்சங்கம் - காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ், தற்காலிகமாக பணிபுரிய ஒரு மருத்துவ அலுவலர், ஒரு முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், மற்றும் 4 லேப் டெக்னீசியன் ஆகிய பணியாளர்கள், 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.

மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி, இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, தமிழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தொகுப்பூதியம் ரூ.45,000 ஆகும். முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி, பட்டப்படிப்புடன் டிஎம்எல்டி டிப்ளமோ மற்றும் இதனுடன் 2 மாத கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ், டூ வீலர் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். இதற்கான தொகுப்பூதியம் ரூ.15,000.

லேப்டெக்னீசியன் பணியிடத்திற்கு கல்வித்தகுதி 12ம் வகுப்பு சான்றிதழுடன் டிஎம்எல்டி / சிஎம்எல்டி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், மாத தொகுப்பூதியம் ரூ.10,000 ஆகும். மேற்கண்ட பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தகுதியுள்ளவர்கள், தங்களுடைய விண்ணப்பங்களை தங்களது கல்வித் தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ் நகலுடன் போட்டோ இணைத்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் இயங்கி வரும், மருத்துவம் மற்றும் காசநோய் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனருக்கு, வருகிற 28ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்துசேருமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 04286 - 292025 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 22 Sep 2021 2:00 PM GMT

Related News