/* */

எருமப்பட்டி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

எருமப்பட்டி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

எருமப்பட்டி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
X

முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த வரதராஜன் கொரோனா நோய் தாக்கத்தால் உயிரிழந்தார். இதனையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார்.

இதனையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது. இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி கடத்தி வைத்துள்ளார். அவர்களை காணவில்லை கண்டுபிடித்து தர வேண்டும் என பொதுமக்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளதாக, அப்போது நடைபெற இருந்த தேர்தல் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 29ம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற இருந்த தேர்தல் மறு தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெறும் என தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் 8 கவுன்சிலர்கள், பாஜகவில் ஒருவர், சுயேச்சை ஒருவர் என 10 பேர் அதிமுக அணியில் உள்ளனர். அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களை திமுகவினர் மிரட்டி வருகின்றனர். கடந்த மாதம் 22 ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த முறையும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலகத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்டியதைப் பார்த்து தான் தெரிந்து கொண்டனர். அதிகாரிகள் யாரும் முன் கூட்டியே அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தக்கோரி கோர்ட்டை நாடவுள்ளோம். அதிமுக தலைமையிடம் பேசி அறவழியில் போராட்டம் நடத்தப்படும் எனதெரிவித்தார். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த கவுன்சிலர்களின் எண்ணிக்கை - 15. இதில் அதிமுக கவுன்சிலர்கள்- 8, பா.ஜ.க கவுன்சிலர் -1, சுயேட்சை கவுன்சிலர் -1, திமுக கவுன்சிலர்கள் -5 பேர் உள்ளனர்.

Updated On: 29 Nov 2021 11:00 AM GMT

Related News