/* */

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 2.42 லட்சம் பேர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2.42 லட்சம் பேர் ஒரு தவணை கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் கவலை தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 2.42 லட்சம் பேர்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2.42 லட்சம் பேர் ஒரு தவணை கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 15 லட்சத்து 15 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 72 ஆயிரத்து 938 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இது 84.02 சதவீதம் ஆகும். இன்னும் 2 லட்சத்து 42 ஆயிரத்து 062 பேர் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ளவில்லை.

2-ம் தவணை தடுப்பூசி, 9 லட்சத்து 54 ஆயிரத்து 375 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது 63 சதவீதம் ஆகும். இன்னும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 563 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி பேட்டுக்கொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 27 கொ தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 912 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இன்னும் கொரோனா நோய் தொற்றும் முற்றிலும் ஒழியவில்லை. எனவே மாவட்டத்தில் த டுப்பூசி போடாமல் உள்ள அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை தொற்றில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Updated On: 28 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?