பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் ஆவின் நிறுவனம் முடங்கும்: ஈஸ்வரன் எச்சரிக்கை
namakkal news, namakkal news today- பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் முடங்கும் அபாயம் உள்ளது என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS

namakkal news, namakkal news today- கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், எ ம்எல்ஏ.,
namakkal news, namakkal news today- பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் முடங்கும் அபாயம் உள்ளது என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, ஈஸ்வரன் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கால்நடைகளின் விலை மற்றும் தீவன விலை உயர்வால், பால் உற்பத்தி விலை அதிகரித்துள்ளது. ஆவின் பால் கொள்முதல் செய்யும் விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகளும் பால் உற்பத்தியாளர்களும் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டு உள்ளனர்.
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில், கொமதேக சார்பில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விளக்கங்களை எடுத்து கூறினோம். தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் விலையை விட லிட்டருக்கு ரூ. 10 வரை அதிகமாக கொடுக்கிறார்கள். அதனால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு விரும்பி பாலை கொடுக்கின்றனர். தற்போது, ஆவின் நிறுவன பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் வரை குறைந்துள்ளது.
கர்நாடகா கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி அதிக விலை கொடுத்து தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்து வருகிறது. தற்போது குஜராத்தை சேர்ந்த அரசு நிறுவனமான அமுல் பால் நிறுவனமும் தமிழ்நாட்டில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்வதாக செய்திகள் வருகின்றன. இந்த சூழ்நிலையில் பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் உள்ளது.
மற்ற கூட்டுறவு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் பாலுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் போது, ஏழை விவசாயிகள் ஆவின் பால் நிறுவனத்திற்கு பாலை விற்க முன் வருவதில்லை. எனவே இதில் உள்ள எதார்த்தமான நியாயத்தை உணர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் நிறுவனத்தையும் ஏழை விவசாயிகளையும் தமிழ்நாடு அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என அவர். கோரிக்கை விடுத்துள்ளார்.