/* */

போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த இந்து முன்னணி தீர்மானம்

நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த இந்து முன்னணி தீர்மானம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில், மாவட்ட தலைவர் கலைவாணன் பேசினார்.

நாமக்கல்லில் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலைவாணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் நகர தலைவர் கோபிகருப்பையா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் திருக்கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ராசிபுரம் கைலாச நாதர் கோயில்களில், காதல் என்ற பெயரில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் உண்மையான பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையினர் இந்த திருத்தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடை செய்ய வேண்டும். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் என்றாலே கல்வி மாவட்டம். இங்கு ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளியூர் மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களிலும், வெளி இடங்களிலும் தங்கிப் படித்து வருகின்றனர்.

இதைப் பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் மாணவ மாணவிகளுக்கு போதை மருந்துகளை சப்ளை செய்து வருகின்றனர். இதனால் பெரும் சமுதாய சீரழிவு ஏற்பட்டு வருகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் போதை மருந்துகள் விநியோகத்தை தீவிரமாக கண்காணித்து முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கடைகள் அமைக்க வேற்று மதத்தினருக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை நாமக்கல் மாவட்டத்தில் முழுமையாக

அமல்படுத்தவேண்டும் என்று இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிபாளையம் பகுதியில் முன் அனுமதியின்றி, திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், பிபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 3 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்