/* */

நாமக்கல்லில் 3-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் மாநாட்டிற்காக பிரமாண்ட பந்தல்

நாமக்கல்லில் 3-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் மாநாட்டிற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 3-ம் தேதி முதல்வர் பங்கேற்கும் மாநாட்டிற்காக  பிரமாண்ட பந்தல்
X

மாநாட்டிற்காக தயாராகும் முகப்புதோற்றம்.

நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில், வருகிற ஜூலை 3ம் தேதி, தமிழக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசுகிறார். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் உள்ள்ளிட்ட 11 ஆயிரம் கலந்துகொள்ள உள்ளனர். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை மாநாடு தொடர்ந்து நடைபெறும்.

மாட்டிற்காக 400 அடி நீளம் மற்றும் 250 அடி அகலத்தில் பிர மாண்ட பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பந்தலின் நடுவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. மேடைக்கு அருகே முதல்வரின் வாகனம் செல்லும் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு பந்தலின் முகப்பு பகுதியில் சென்னை மாநகராட்சி அலுவலக கட்டிடத்தின் ரிப்பன் பில்டிங் போன்ற முகப்பு அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலம் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநாட்டிற்கான முன்னேற்பாட்டு பணிகளை ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கிச்சென்றுள்ளனர். பந்தல் மற்றும்மேடை அமைப்பு பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, முன்னாள் எம்.பி சுந்தரம், மாநில நிர்வாகிகள் மணிமாறன். ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாடு துகுறித்து ராஜேஷ்குமார் எம்.பி. கூறியதாவது:- வருகிற 3-ந் தேதி தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக் கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற உள்ளது. அதற்காக பிரம்மாண்ட மேடையும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் மிகப்பெரிய அளவில் பந்தலும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 10 ஆயிரம் பேர் உணவு அருந்துவதற்கு ஏதுவாக தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாது காப்புடன் கூடிய பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 29 Jun 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  3. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  4. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  5. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  6. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  7. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...