/* */

நாமக்கல் மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், வரும் அக். 2ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள எருமப்பட்டி, வெண்ணந்தூர் வட்டாரங்கள் மற்றும் எலச்சிப்பாளையம், கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம் மோகனூர், நாமக்கல், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், பரமத்தி, சேந்தமங்கலம், திருச்செங்கோடு ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராம ஊராட்சிகள் தவிர, மற்ற கிராம பஞ்சாயத்துக்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி கொரொனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கொரொனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

அத்துடன், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 2021 -22ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு - செலவு திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்