/* */

அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை

அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற நாமக்கல் கொ.ம.தே.க. கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

அரசு உயர்நிலைப்பள்ளி  அருகில் உள்ள டாஸ்மாக்  மதுக்கடையை அகற்ற கோரிக்கை
X

ஆண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கொ.ம.தே.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யெலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில், மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 350க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் அருகில் சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருதம்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. இந்த மதுபானக் கடைக்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவைக் குடித்துவிட்டு, காலி பாட்டிலை பள்ளி வளாகத்துக்குள் வீசி எறிகின்றனர். இதனால் பாட்டிகள் உடைந்து மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் நடமாட முடியாத அவல நிலையில் உள்ளது. குடிமகன்களின் நடமாட்டத்தால், பள்ளிக்கும் வரும் மாணவர்கள் அச்சத்துடன் வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் கலக்கத்துடன் பள்ளிக்கு வரும் நிலை உள்ளது. பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளதால், மாணவ மாணவிகள் சுதந்திரமாகவும் அச்சம் இன்றியும் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட எல்லையில், மருதம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மார்க் மதுக் கடையால் பாதிக்கப்படும், நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 Jun 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  4. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  5. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  6. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  7. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  8. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  9. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை