/* */

கலெக்டருக்கு மெமோ கொடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது: எம்.பி சின்ராஜ்

அரசு விதிமுறைப்படி கூட்டம் நடத்தாவிட்டால் கலெக்டருக்கு மெமோ கொடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என எம்.பி சின்ராஜ் பரபரப்பு பேட்டி

HIGHLIGHTS

கலெக்டருக்கு மெமோ கொடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது: எம்.பி சின்ராஜ்
X

சின்ராஜ். எம்.பி.,

அரசு விதிமுறைப்படி மாவட்ட வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடத்தாவிட்டால், கலெக்டருக்கு மெமோ வழங்கும் அதிகாரம் எனக்கு உள்ள என்று, நாமக்கல் எம்.பி சின்ராஜ் பரபரப்பாக பேட்டியளித்தார்.

நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ், இன்று நேற்று காலை 9.55 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக போர்டிகோஅருகில், தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதையடுத்து, காலை, 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்த கலெக்டர் ஸ்ரேயா சிங், நேராக சென்று எம்.பி., சின்ராஜிடம் என்ன கோரிக்கை என கேட்டார். அதற்கு, முதலில் என் அதிகாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனக்கூறி, ஒரு பைலை கலெக்டரிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிக் கொண்ட கலெக்டர் உள்ளே சென்றுவிட்டார்.

தொடர்ந்து எம்.பி சின்ராஜ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மீண்டும் பகல் 1 மணிக்கு கீழே இறங்கி வந்து, எம்.பி சின்ராஜை சந்தித்து வரும் ஆகஸ்ட் மாதத்தில், சாலை பாதுகாப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கூட்டம் நடத்த தேதி கேட்டார். மேலும், மின்வாரிய கணக்குக்குழு கூட்டம் நடத்துவதற்கு, கமிட்டி தேர்வு செய்ய வேண்டும். விதிமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும் அதனால், பின்னர் நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார். அதையடுத்து, 3 மணி நேரம் நடந்த தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

இது குறித்து, எம்.பி. சின்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கூட்டம், சாலை பாதுகாப்பு குழு கூட்டம், மின்வாரிய கணக்குக்குழு கூட்டம் ஆகியவற்றை ஆண்டுக்கு, நான்கு முறை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. இது தொடர்பாக, பல முறை கடிதம் அனுப்பியும் கலெக்டரிடம் இருந்து பதில் வரவில்லை. கடந்த சில நாட்களாக, கலெக்டரின் போக்கு, லோக்சபா உறுப்பினர் என்ற முறையில், மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போனது. கூட்டத்தை நடத்துவதற்கு, அமைச்சர் தேதி கொடுக்க வேண்டும் எனக்கூறி காலதாதம் செய்து வருகின்றனர். வளர்ச்சிக்குழு கூட்டத்தில், மாவட்ட அமைச்சர் ஒரு உறுப்பினராகத்தான் கலந்து கொள்ள முடியும். அவரது தேதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ராஜ்யசபா எம்.பி. குழுவின் துணைத்தலைவர்தான். அவர் விருப்பப்பட்டால் வரலாம். வராமலும் இருக்கலாம்.

நான் சொல்லும் தேதியில், கலெக்டர் கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதி. நாமக்கல் மாவட்ட கால்நடைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2.25 கோடி நிதி, ஒன்னேகால் ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த நிதி திரும்பி சென்றுவிடும் சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக, கலெக்டருக்கு பதிவு தபால், மெயில் அனுப்பினேன். அவர் வாட்ஸ் ஆப் பார்ப்பது இல்லை. இது எதற்கும் பதில் அளிக்கவும் இல்லை. இனி வரும் காலங்களில், சரியான முறையில் கலெக்டர் நடந்து கொண்டால் சந்தோஷம். விதிமுறைப்படி கூட்டங்கள் நடத்த தவறினால், கலெக்டருக்கு மெமோ கொடுக்கம் அதிகாரம் எனக்கு உள்ளது என்று கூறினார்.

Updated On: 11 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!