நாமக்கல் மற்றும் குமாரபாளையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

நாமக்கல் மற்றும் குமாரபாளையம் பகுதியில், ரூ.1 கோடி மதிப்புள்ள, 300 கிலோ கஞ்சா, 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் மற்றும் குமாரபாளையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
X

நாமக்கல் மற்றும் குமாரபாளையம் பகுதியில் கடத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்களை, மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பார்வையிட்டார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலம் – கரூர் பைபாஸ் ரோட்டில், நாமக்கல் முதலைப்பட்டி அருகில், நாமக்கல் எஸ்.ஐ முருகன் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்தவர்கள், தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன் (49), ஜெயச்சந்திரன் (67), முகேஷ் (29) என்பதும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து, தேனி மாவட்டத்துக்கு கஞ்சா (போதைப்பொருள்) கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 200 கிலோ கஞ்சாவும் ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சேலம் – கோவை பைபாஸ் ரோட்டில், குமாரபாளையம் கத்தேரி ஜங்சன் அருகில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடந்த வாகன சோதனையில், அவ்வழியாக வந்த, 2 காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த, கோவை குனியமுத்தூர் கிஷோர்குமார் (30), உக்கடம் அப்துல் ஜலீல் (30), முஜீப் ரகுமான் (29), சுல்தான் (29) ஆகியோர், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோவைக்கு, கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த இரண்டு சோதனையிலும், மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான, 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த, 2021ல் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என எஸ்.பி தெரிவித்தார்.

Updated On: 2022-01-12T21:06:40+05:30

Related News

Latest News

 1. கரூர்
  சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...
 2. ஈரோடு
  டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
 3. பழநி
  தைப்பூசத் திருவிழா நிறைவு: பழனி கோயில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை
 4. ஓசூர்
  பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 -வது தேசிய குடியரசு தின விழா
 5. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
 6. கூடலூர்
  முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் குடியரசு தின விழா
 7. திருவெறும்பூர்
  திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
 8. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை
 9. கோவை மாநகர்
  தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து...
 10. கரூர்
  பஞ்சாயத்து அலுவலகத்தில் திமுக பிரமுகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததால்...