/* */

நாமக்கல்லில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி: ஆட்சியர் தகவல்

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

கோழித்ததீவனம் மற்றும் முட்டை பதப்படுத்தும் தொழிலுக்கு மத்திய அரசின் மானிய உதவியுடன் கடன் உதவி அளிக்கப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பாரத பிரதமரால் 2020-2021-ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில், உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய உணவுப்பதப்படுத்தும் அமைச்சகம் சார்பில், தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு, மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு கோழித்தீவனம் மற்றும் முட்டை சார்ந்த பொருட்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் கோழித்தீவனம் தவிர பிற உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் மார்க்கெட்டிங் பணிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே முட்டை சார்ந்த பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள, சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் புதிய நிறுவனங்கள் தொடங்குதலுக்கு 139 பேருக்கு மானிய உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம். மேலும் இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கு ரிசோர்ஸ் பர்சனாக நியமிக்கப்பட்டுள்ள வித்யபாரதியை, 8870757380 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  7. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  8. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  10. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’