/* */

நாமக்கல்: பிப்.1 முதல் நாட்டுக்கோழிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், பிப்ரவரி 1 முதல் நாட்டுக்கோழிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: பிப்.1 முதல் நாட்டுக்கோழிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்
X

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானியங்களை உட்கொண்டு, நாட்டுக்கோழிகள் வளர்ந்து வருகின்றன. கோழிகளை, கோழிக்கழிச்சல் நோய் எளிதாக பாதிக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக கோழிக்கழிச்சில் தடுப்பூசி போடப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மாதத்தில், கோழி நோய் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற பிப்.1 முதல் 14ம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்போர், தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் நடைபெறும் முகாமில், தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழிநோய் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 26 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்