/* */

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் சணல்நார் பை தயாரிப்பு இலவச பயிற்சி

நாமக்கல் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சணல்நார் பை தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் சணல்நார் பை தயாரிப்பு இலவச பயிற்சி
X

நாமக்கல் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சணல்நார் பை தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா கூறியுள்ளதாவது:

நாமக்கல்லில் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் சணல் நார் பை தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பிப்.17 தொடங்கி 13 வேலைநாட்கள் நடைபெறும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 35 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பயிற்சிக்கான பொருள் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்கள் இம்மாதம் 17ம் தேதிக்குள் நாமக்கல் திருச்சி ரோடு, ரயில்வே மேம்பாலம் அருகில் இயங்கி வரும், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நேரில்வந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?