/* */

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை-சிகிச்சை

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை-சிகிச்சை
X

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறும் கொரேனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

இது குறித்து நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, செயலாளர் அருள் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில்நாளை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் கொரோன முதல் மற்றும் இரண்டாம் தவணை, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும். மேலும் சங்க உறுபினர்கள், குடும்பத்தினர் மற்றும் டிரைவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முகாமில் கழுத்துவலி, துகுவலி, மூட்டுவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, போன்றவைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். மேலும், கண்பரிசோதனை, சர்க்கரைஅளவு, ரத்த அழுத்தம், உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவையானவர்களுக்கு உடல் பருமன் குறைக்க ஆலோசனைகள் வழங்கப்படும். லாரி, ட்ரெய்லர், எல்பிஜி சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Oct 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?