/* */

நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு, 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு,  26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
X

நாமக்கல் கே.கே.நகரில் உள்ள முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வீட்டிற்கு முன்புறம் உள்ள அவுட் ஹவுசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அமர்ந்துள்ளனர்.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் பாஸ்கர். இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு மோகனூர் ரோட்டில், உள்ள கே.கே.நகரில் உள்ளது. இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார்.

பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும், இதையொட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு சம்மந்தமாக பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 6 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் தங்கை வீடு, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் இந்த சோதணை நடைபெற்று வருகிறது. இதனால் நாமக்கல் அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

Updated On: 12 Aug 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?