/* */

10ம் வகுப்பு அறிவியல் பிராக்டிக்கல் தேர்வுக்கு இன்று முதல் பதிவு

10ம் வகுப்பு அறிவியல் பிராக்டிக்கல் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம் என தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

10ம் வகுப்பு அறிவியல் பிராக்டிக்கல் தேர்வுக்கு இன்று முதல் பதிவு
X

பைல் படம்.

10 ஆம் வகுப்பு அறிவியல் பாட செயல்முறை (பிராக்டிக்கல்) தேர்வுக்கு தனித்தேர்வர்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கெனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செயல்முறை (பிராக்டிக்கல்) பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து தனித் தேர்வர்களும் நவ.18 முதல் டிச.3-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வார்கள் மட்டுமே 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரத்தை அறிந்து கொண்டு செயல்முறை தேர்வினை தவறாமல் எழுத வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களைத் தொடா?பு கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை இண்டர்நெட்டில் நவ.18 முதல் டிச.3 வரை டவுன்லோடு செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?