/* */

இணை இடுபொருட்கள் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது: வேளாண்துறை எச்சரிக்கை

விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக, மானிய விலை உரங்களுடன் இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

இணை இடுபொருட்கள் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது: வேளாண்துறை எச்சரிக்கை
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில், யூரியா 1,382 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 937 மெட்ரிக் டன், பொட்டாஷ் 979 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 334 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4,165 மெட்ரிக் டன் அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் உர விற்பனையாளர்கள், அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். ரசாயன உரங்களின் இருப்பு, விலைப் பட்டியலை, விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக, மானிய விலை உரங்களுடன், இணை இடுபொருட்களை வாங்க, அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. உரக்கட்டுப்பாட்டு சட்டவிதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 Aug 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்