/* */

நாமக்கல்லில் மோட்டார் வாகனங்களின் கண்காட்சி ஆட்டோ எக்ஸ்போ துவக்க விழா

நாமக்கல்லில் மோட்டார் வாகனங்களின் கண்காட்சி ஆட்டோ எக்ஸ்போ துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மோட்டார் வாகனங்களின் கண்காட்சி  ஆட்டோ எக்ஸ்போ துவக்க விழா
X

நாமக்கல்லில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்றது.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன், நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன், நாமக்கல் மெக்கானிக்கல் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன் மற்றும் நாமக்கல் ஆட்டோநகர் அசோசியேசன் இணைந்து, ஆட்டோ எக்ஸ்போ - 2022 என்ற பெயரில் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கண்காட்சி, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள ஐஸ்வர்யம் மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து எக்ஸ்போ கொடியை ஏற்றி வைத்தார். அசோக் லேலண்ட் கனரக வாகன பிரிவு தலைமை அதிகாரி சஞ்சீவ் குமார் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்தியன் ஆயில் சர்வீஸ் பிரிவு துணை பொது மேலாளர் ரவிகுமார், ஜே.கே. டயர்ஸ் மண்டல மேலாளர் சுந்தர், டாடா வாகன தென்மண்டல மேலாளர் பிரசாத், டி.வி.எஸ். ஆட்டோமொபைல் செல்யூசன்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசராகவன், டெய்ம்லர் மோட்டார்ஸ் மண்டல மேலாளர் சஹீர் ரஹ்மான், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், எம்எம்ஏ தலைவர் கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் துவக்க விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் நாமக்கல் எக்ஸ்போ செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.

கண்காட்சியில் இந்தியாவில் உள்ள முன்னனி மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள், லூப்ரிகண்ட் ஆயில் தயாரிப்பு கம்பெனிகள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர், டயர் கம்பெனிகள், பேட்டரி கம்பெனிகள், தார்பாய், கயிறு தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து திரளான லாரி, பஸ், ட்ரெய்லர், டேங்கர், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். நாளை 18ம் தேதி கண்காட்சி நிறைவு விழா நடைபெறும்.

Updated On: 16 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!