Begin typing your search above and press return to search.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி: கொமதேக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தல் பணிக்குழுவை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது.
HIGHLIGHTS

இது குறித்து, திமுகவின் கூட்டணி கட்சியான, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் கொமதேக தேர்தல் பணிக்குழு தலைவராக, கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி செயல்படுவார். துணைத்தலைவராக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு கோவிந்தராசு நியமிக்கப்பட்டுள்ளார். ஆலோசகர்களாக மாநில அவைத்தலைவர் ஜெகநாதன், மாநில பொருளாளர் கேகேசி பாலு, நாமக்கல் எம்.பி. சின்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக சுரேஷ் பொன்னுவேல், பவானிராஜா, கார்த்திகேயன், ஈஸ்வரமூர்த்தி, பிரபாகரன், குமார், சாமிநாதன், சிவராஜ், லோகநாதன், முத்துசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.