/* */

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமல்: கலெக்டர் அறிவிப்பு

நாமக்ககல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமல்: கலெக்டர் அறிவிப்பு
X

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்ககல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வருகிற அக். 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி, ஒரு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 5 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 25 பதவிகளுக்கு அக்.9ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்திலும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எந்த பகுதியிலும், நலத்திட்டங்கள் மற்றும் பணிகளுக்காக புதிதாக நிதி விடுவிக்கப்படுவதும், பணி ஒப்பந்தங்கள் வழங்குவதும் கூடாது. இருப்பினும் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட பணிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து நிதி துறையின் ஒப்புதலுடன், நிதி ஒதுக்கீடு செய்யலாம். ஏற்கனவே முடிவுபெறும் தருவாயில் உள்ள திட்டங்களை நிறுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ தேவையில்லை. தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடப்பில் உள்ள பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது அலுவலக வாகனங்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும், வேட்பாளர்கள், கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாதிரி நன்னடத்தை விதிமுறை கையேடு, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள விதிமுறைகளை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அனைத்து துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?