/* */

நாமக்கல் மண்டலத்தில் இனி முட்டை விலை குறையாது: என்இசிசி அறிவிப்பு

நாமக்கல் மண்டலத்தில், தற்போதுள்ள விலைக்கு கீழ், முட்டை விலை குறையாது என என்இசிசி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மண்டலத்தில் இனி முட்டை விலை குறையாது: என்இசிசி அறிவிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,000 பண்ணைகளில் 5.50 கோடி, முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்கான விற்பனை விலையை, இந்தியா முழுவதும் உள்ள விலையை அனுசரித்து, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ. 5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக உள்ளது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ. 1.05 சரிவடைந்ததால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை யாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்புக்குழு துணைத்தலைவரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தலைவருமான சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோழி முட்டை விலை இந்தியா முழுவதும் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஹைதராபாத் மண்டல என்இசிசி இனி முட்டை விலை குறைக்கப்படமாட்டாது, பாட்டம் பிரைஸ் (குறைந்த விலை) ஒரு முட்டை விலை 415 பைசாதான் என அறிவித்துள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று 3 பைசா உயர்த்தி 418 என ஐதராபாத் என்இசிசி அறிவித்துள்ளது. பர்வாலா மண்டலத்தில் முட்டை மார்க்கெட் நார்மல் ஆகி வருகிறது. மேலும் ஹொஸ்பேட்பெட் மண்டலத்திலும், முட்டை விலை இதற்கு கீழ் குறையாது என அறிவிப்பு செய்துள்ளனர்.

மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு, நாமக்கல் விலையும் இதற்கு கீழ் குறையாது. எனவே பண்ணையாளர்கள் முட்டைகளை விற்கும் பொழுது, முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு, என்இசிசி விலையில் இருந்து 30 பைசாவுக்கு கீழ் குறைத்து விற்பனை செய்ய ÷ வண்டாம். சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை, அதிகம் மைனஸ் விலைக்கு விற்பனை செய்யாமல், அறிவிக்கப்பட்ட 30 பைசா மட்டுமே குறைத்து விற்பனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது எனவே பண்ணையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

Updated On: 31 Jan 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி