/* */

தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு சட்டக் கல்லூரிகள்: அமைச்சர் ரகுபதி தகவல்

தமிழகத்தில் முதன் முதலில் சட்டக்கல்விக்கென அம்பேத்கார் சட்டப்பல்கலை.யை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார்

HIGHLIGHTS

தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு சட்டக் கல்லூரிகள்:  அமைச்சர் ரகுபதி தகவல்
X

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்திற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி. ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் அரசு சட்டக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகம் அருகில் ரூ.92 கோடியே 31 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையொட்டி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:

தமிழகத்தில் முதன் முதலில் சட்டக்கல்விக்கென அம்பேத்கார் சட்டப்பல்கலை.யை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். தற்போது மாநிலம் முழுவதும் 15 அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. மேலும் அம்பேத்கார் சட்ட பல்கலையில் ஒரு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. திருச்சியில் நேஷனல் சட்ட பல்கலையில் ஒரு சட்டக்கல்லூரி என மொத்தம் 17 சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்ற. இது தவிர தனியார் துறையில் சில சட்டக்கல்லூரிகள் உள்ளன. ஒரு காலத்தில் சென்னையில் மட்டும்தான் சட்டக் கல்லூரி இருந்தது. மொத்தம் ஒரு ஆண்டிற்கு 700 பேர் மட்டுமே சட்டம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது ஆயிரக்கணக்கானவர்கள் சட்டக்கல்வி படிக்க முடிகிறது.

தமிழகதத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரிகளை துவக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். விரைவில் மாவட்டம்தோறும் சட்டக்கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்காலத்தில் சட்டக்கல்வி படித்துவிட்டு தான், கோர்ட்டிற்கு சென்று பயிற்சி பெற முடியும். தற்போது ஒவ்வொரு சட்டக்கல்லூரியிலும் மாதிரி கோர்ட் ஏற்படுத்தப்பட்டு, படிக்கும் போதோ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது பல்வேறு குற்ற சம்பவங்கள் நவீன முறையில் நடைபெறுகின்றன. சைபர் கிரைம் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், வணிகவியல் குற்றங்கள் என்று பல்வேறு விதமான புதிய புதிய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கேற்ப சட்டக்கல்லூரி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இன்று அரசியல் அமைப்பு சட்டம் உருவான தினமாகும். இன்று நாமக்கல் சட்டக்கல்லூரி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாகும்.

தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய சட்டக் கல்லூரி துவக்க அனுமதியளித்தார். மேலும், நாமக்கல் சட்டக்கல்லூரிக்கு ரூ.92 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழஙகியுள்ளார். இதையொட்டி நாமக்கல் சட்டக்கல்லூரிக்கு கல்லூரி, ஹாஸ்டல், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, நாமக்கல் சட்டக்கல்லூரி முதல்வர் அருண், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Nov 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?