/* */

பாஜக சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை வழங்கல்

பாஜக சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மானர் பாரத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

பாஜக சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை வழங்கல்
X

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு, மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகளை, பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி வழங்கினார்.

நாமக்கல் நகர பாஜக சார்பில், கொண்டிசெட்டிப்பட்டியில் இயங்கி வரும், மக்கள் சேவை மையத்தில், மத்திய அரசின் ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான வி.பி.துரைசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 400 குடும்பத்தினருக்கு, மத்தியஅரசின் மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகளை வழங்கினார். 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திரளான பாஜக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Aug 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...