/* */

அரசு ஜீப் டிரைவர் பணிக்கு நேரடி நியமனம்: எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்லில் அரசு ஜீப் டிரைவர் பணிக்கு, எஸ்.டி பிரிவினர் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு ஜீப் டிரைவர் பணிக்கு நேரடி நியமனம்:  எஸ்.டி பிரிவினர் விண்ணப்பிக்க அழைப்பு
X

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், அரசு ஜீப் டிரைவர் காலி இடம் உள்ளது. இந்த பணியிடம் இனச்சுழற்சி ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள ஒரு குறைவு பணியிடத்திற்கு சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனமாக ஜீப் டிரைவர் பணியிடம் தேர்வு செய்யப்படவுள்ளது.

ஜீப் டிரைவர் பணியிடத்திற்கு கல்வித் தகுதியாக, 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி, தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாகனங்களை இயக்குவதில் 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஜீப் டிரைவர் பணிக்கு, பழங்குடியின பிரிவினர் (எஸ்டி) மட்டுமே விண்ணப்பிப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பழங்குடியின பிரிவினர் 1.7.2023 அன்று 18 வயதினை பூர்த்தி செய்தவர்களாகவும், 42 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இப்பணிக்கான விண்ணப்பங்களை நாமக்கல்.என்ஐசி.இன் என்ற வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, கல்வித்தகுதி, சாதிச் சான்று (இனம்), டிரைவிங் லைசென்ஸ், டிரைவர் அனுபவச் சான்று ஆகிய சான்றுகளின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். 31.1.2022 அன்று மாலை 5.45 க்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதியான நபர்கள் திறனாய்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியான நபர்கள் சுய விண்ணப்பபடிவத்துடன் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள வளர்ச்சிப் பிரிவில், 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரடியாகவோ, தபால் மூலமோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Jan 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்