சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல் ஆர்ப்பாட்டம்

namakkal news, namakkal news today- மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வருகிற ஜூன் 12ம் தேதி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல் ஆர்ப்பாட்டம்
X

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் ஜூன் 12ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் நடைபெற்றது.

மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள் லகுமய்யா, துளசிமணி, சிபிஐ மாவட்ட செயலாளர் அன்புமணி, நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசு விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து வருகிற 12ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சி கழிவு நீர் தூசூர் ஏரி யில் கலப்பதால் கழிவு நீர் செல்லக்கூடிய வீசானம், வேட்டாம்பாடி, சிவியாம்பாளையம், லக்கமநாயக்கன்பட்டி, தூசூர் ஆகிய பகுதிகளில் விளைநிலங்கள், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்டுகிறது. இவற்றை போக்கிட மாவட்ட நிர்வாகம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்தப்படுத்தி அனுப்ப வேண்டும் என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் 1981ஆம் ஆண்டு கூட்டுறவு துறையில், ஆவின் பால் நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் தமிழக விவசாயிகளிடம் பாலை கொள்முதலை செய்து, அதன் மூலம் மக்களுக்கு 50 விதமான பால் பொருட்களையும், பால் விற்பனையையும் வெற்றிகரமாக செய்துவருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்ய குஜராத் அமுல் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதிக்கும். தற்போது அமுல் நிறுவனம் பாலினை கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஆவின் நிறுவனத்திற்கு எதிராநடவடிக்கையாகும். எனவே தமிழகத்தில் பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 31 May 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா