/* */

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன் பெற அழைப்பு

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன் பெறலாம் என, மாவட்ட கலெக்டர் அழைப்புவிடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன் பெற அழைப்பு
X

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், பதிவு செய்து பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 2021-21 ம் ஆண்டு ரபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், நெல்(நவரை), பச்சைப்பயறு, உளுந்து, எள், கரும்பு, நிலக்கடலை, பருத்தி, வாழை, சிறிய வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இன்சூரன்ஸ் செய்து பயனடையலாம்.

அதன்படி, பிரிமியத்தொகையாக சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.123.75/ வீதம் 30.11.2021க்குள் செலுத்த வேண்டும். மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.410.89 வீதம் 30.11.2021க்குள் செலுத்த வேண்டும். நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.296.40 வீதம் 31.12.2021க்குள் செலுத்த வேண்டும். பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.544.58 வீதம் 15.03.2022க்குள் செலுத்த வேண்டும். பச்சைப்பயறு மற்றும் உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.196.59 வீதம் 15.11.2021க்குள் செலுத்த வேண்டும். நெல் (நவரை) பயிருக்கு ரூ. 512.77 வீதம் 31.01.2022க்குள் செலுத்த வேண்டும். எள் பயிருக்கு ரூ.122.27 வீதம் 15.02.2022 க்குள் செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு ரூ.2840.50 வீதம் 31.08.2022க்குள் செலுத்த வேண்டும்.

மேலும் தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1716.66 வீதம் 15.02.2022க்குள் செலுத்த வேண்டும். தக்காளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.941.08 வீதம் 15.02.2022க்குள் செலுத்த வேண்டும். சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1896.96 வீதம் 31.01.2022க்குள் செலுத்த வேண்டும். மரவள்ளி பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1468.42 வீதம் 28.02.2022க்குள் செலுத்த வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதி மொழி கடிதம் அளித்து பயிர் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள், பொதுச்சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் இன்சூரன்ஸ் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் விஏஓ அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல். ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநரை தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Nov 2021 11:30 AM GMT

Related News