/* */

நாமக்கல், திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ.12 லட்சம் பருத்தி ஏலம்

நாமக்கல், திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் ரூ.12 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

HIGHLIGHTS

நாமக்கல், திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ.12 லட்சம் பருத்தி ஏலம்
X

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், மோகனூர் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், 400 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.

திருச்செங்கோடு, கொங்கனாபுரம், ஈரோடு, அவிநாசி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியைக் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பருத்தி விற்பனை நடைபெற்றது. ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,500 முதல், ரூ.9 ஆயிரம் வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், கொட்டு ரக பருத்தி, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 109 முதல் ரூ.5 ஆயிரத்து 299 வரையிலும் ஏலம் போனது.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (டிசிஎம்எஸ்) பருத்தி ஏலத்திற்கு 150 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 950 முதல் ரூ.7 ஆயிரத்து 822 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரம் 50 முதல் ரூ.8 ஆயிரத்து 500 வரையிலும் ஏலம் போயின.

Updated On: 24 Nov 2021 2:15 AM GMT

Related News