/* */

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

கோப்பு படம்

நாமக்கல், -திருச்செங்கோடு ரோட்டில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி (என்சிம்எஸ்) உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், பரமத்தி, கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவார்கள்.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 450 மூட்டைகள் பருத்தி வரத்து வந்தது. திருச்செங்கோடு, கொங்கணாபுரம், சேலம், பெருந்துறை, அவினாசி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில் ஆர்சிஎச் பருத்தி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,011 முதல் ரூ. 8,818 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,899 முதல் ரூ. 9,009 வரையிலும், கொட்டுப்பருத்தி ரகம் ரூ. 4,100 முதல் ரூ. 4,799 வரையிலும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ. 11 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம் மூலம் விற்பனையானது.

Updated On: 27 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு