/* */

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 28,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 12ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மொத்தம் 28,113 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 28,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 11 மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 13,84,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (72.40 சதவீதம்) 10,02,218 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி (38.82 சதவீதம்) 5,37,414 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 8,544 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,371 பேருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 10,155 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,379 பேருக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 8,543 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,143 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 1,34,122 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 73,661 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 18 வயது நிறைந்த தடுப்பூசிப்போட்டுக்கொள்ள தகுதியான 3,82,082 பேர் இதுவரை ஒரு தவணை கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 10,02,218 பேரில் 4,64,804 பேர், அவர்களுக்கான தவணை நேரம் கடந்தும் இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.

நேற்று 12ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மொத்தம் 506 முகாம்களில் காலை 7மணி முதல் இரவு 7மணிவரை நடைபெற்றத. இம்முகாம் பணிகளில் 210 டாக்டர்கள் மருத்துவர்கள், 430 நர்சுகள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி நர்சுகள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு சுமார் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 28,113 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

Updated On: 29 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?