/* */

நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 75 பேருக்கு கொரோனா

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 75 பேருக்கு கொரோனா
X
பைல் படம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 3வது அலை மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் வேகமாக பரவி நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும், 7 டாக்டர்கள், 3 நர்சுகள், ஒரு தொழில் நுட்ப உதவியாளர் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள 8 அரசு ஆஸ்பத்திரிகள், 63 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை விட தற்போது பாதிப்பு குறைவாக உள்ளதாலும், உயிரிழப்புகள் அதிகம் இல்லாததும், பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது.

Updated On: 22 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!