/* */

கொரோனா குறித்த புகாரா? நாமக்கல்லில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும், கொரோனா கட்டுப்பாடு அறை துவக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா குறித்த புகாரா?  நாமக்கல்லில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
X

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. 10க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வரவும், வெளி ஆட்கள் உள்ளே செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா குறித்த புகார் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 04286 221001 மற்றும் 98425 44448 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தங்களின் புகார் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். மேலும், கொரோனா குறித்த தகவல்களையும் கேட்டுப்பெறலாம் என்று நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 May 2021 2:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!