/* */

ஆண்களுக்கு நவீன கருத்தடை: விழிப்புணர்வு வாகனம் துவக்கிவைப்பு

நாமக்கல்லில், ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆண்களுக்கு நவீன கருத்தடை:  விழிப்புணர்வு வாகனம் துவக்கிவைப்பு
X

நாமக்கல்லில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை பிரச்சார வாகனத்தை, கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறையின் சார்பில், நவ. 21 முதல் டிச.4 வரை ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை, இருவார விழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம், நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று, பொதுமக்களுக்களிடம், தகுதி வாய்ந்த தம்பதியினர், ஆண்களிடம் தழும்பில்லாத நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடும்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு, பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?