நூல் விலை உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நூல் விலை உயர்வைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நூல் விலை உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, நூல் விலை உயர்வைக் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் :

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில், நூல் விலை உயர்வைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இத்தொழிலே வாழ்வாதாரமாக உள்ளது. இத்தொழிலுக்கு மூலாதாரமாக விளங்கும் பஞ்சு மற்றும் நூல் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து கொண்டே வருவதால் ஜவுளி தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல், தறிபட்டறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை உடனடியாக தடை தடை செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூல் பதுக்கலை தடுத்து, அவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில்சேர்க்க வேண்டும். மானிய விலையில் நூல் வழங்கிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி. பால் சங்க மாநில முன்னாள் செயலாளர் ரங்கசாமி, சிஐடியு துணை செயலாளர்கள் சிவராஜ், மோகன். சு.சுரேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 2022-05-25T18:07:57+05:30

Related News