நர்சரி பண்ணைக்கு விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம்: துணை இயக்குநர்

நர்சரி பண்ணை வைத்திருப்பவர்கள் விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம் என விதை ஆய்வு துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நர்சரி பண்ணைக்கு விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம்: துணை இயக்குநர்
X

பைல் படம்.

இது குறித்து சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், விதைகளை அதற்கான லைசென்ஸ் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

விதை கொள்முதல் விபரங்களை, இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு, நாற்றுகளை விற்பனை செய்யும்போது, பயிர் ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விபரங்களுடன் விவசாயிகளின் கையொப்பத்துடன் ரசீது வழங்க வேண்டும்.

பழச்செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும்போது, அவற்றின் ரகம், விலை குறிப்பிட்டு ரசீது வழங்கி இருப்பு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்.

நர்சரி முன்பு, நர்சரி பெயர் பலகையும், நாற்றுகள் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய இருப்பு பலகையும் வைக்க வேண்டும். அவற்றை பின்பற்றாமல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய லைசென்ஸ் பெற விரும்புபவர்கள் சேலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில்த்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்து, லைசென்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 2021-09-19T16:09:45+05:30

Related News