/* */

அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

அரையாண்டு விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
X

கலெக்டர் ஷ்ரேயா சிங்

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பள்ளிக்கல்வித்துறையால் பள்ளிகளுக்கு, 2021-22ஆம் கல்வியாண்டில், 27.12.2021 முதல் 31.12.2021 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிவுற்று ஜன.3ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.

இந்த, விடுமுறை நாட்களில் பள்ளிக்கு மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என அனைத்து நகராட்சி, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்சி துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால், சம்மந்தபட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  2. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  3. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  5. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  9. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  10. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா