/* */

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் இயக்க மாநில செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். நாமக்கல் வெங்கடாசலம், மோகனூர் ராமலிங்கம், வேலூர் சண்முகம், திருச்செங்கோடு கதிர்வேல், ராசிபுரம் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேங்காய் விலை கடும் சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசு நேரடியாக கொள்முதல் கொள்முதல் செய்து ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யவேண்டும்.. கொப்பரை கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு கிலோவிற்கு ரூ.130 ஆக அறிவிக்க வேண்டும். தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் தடையை நீக்க வேண்டும்.

கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு, உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் உயர்த்தி அரசே விலையை நிர்ணயிக்க வேண்டும். மரவள்ளி, நிலக்கடலை மற்றும் சோளத்திற்கு உற்பத்தி செலவிற்கு ஏற்ப அரசே விலை நிர்ணயிக்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் செயல்படும், 100 நாள் வேலையை முற்றிலும் விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Aug 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...